“உலகநாயகன் கமல்ஹாசனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரிப்பாரா?”
எல்லோரும் சொல்வதைப் போல இது மில்லியன் டாலர் கேள்வி மட்டுமல்ல.ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.!
இது நடக்குமா,சாத்தியம் இருக்கிறதா,?
நடந்தால் அது வரலாற்று மாற்றம்.
என்ன இருந்தாலும் ரஜினிகாந்த் பிஜேபி மோடியின் ஆதரவாளர் .அவர் எப்படி மோடியை எதிர்ப்பவரை ஆதரிப்பார்? ரஜினியை நம்பித்தானே பிஜேபி தனது அடித்தளம் அமைவதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறது?
அதிமுக கூட்டணியில்தான் ஐந்து இடங்கள் பெற்றிருக்கிறது என்று இபிஎஸ்-ஓபிஎஸ் சொன்னதை பிஜேபி தலைவர் அமித்ஷா ஓங்கி அடித்து “அப்படி இல்லை! எங்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக சேர்ந்திருக்கிறது!”என்றெல்லவா திருத்தம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
அவரது நண்பர் ரஜினி காந்த் என்பதை இங்கு நினைவில் கொள்க.
“பாஜக-அதிமுக கூட்டணியில் சேருகிற வாய்ப்பே மக்கள் நீதி மய்யத்துக்கு இல்லவே இல்லை” என்று சொல்லிவிட்டார். அழுத்தம் திருத்தமாக “திமுக அணியிலும் சேரப் போவதில்லை.நாற்பதிலும் தனித்தே போட்டி “என்பதையும் சொல்லி இருக்கிறார்.
“திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாங்கள் ஒரு அணி’ என்றுதான்”கமல் கூறினார்
“மூன்றாவது அணி அமைகிற வாய்ப்பு இருக்கிறது என்பதாக ” மீடியாக்கள்தான் கூவின
அதே நேரத்தில் ரஜினி,சீமான் ஆகியோரது ஆதரவு இருந்தால் நல்லது”என்பதை அவர் கோடிட்டுக் காட்டத்தவறவில்லை.
ஆனால் ரஜினி ஆதரிப்பாரா? தனது பிஜேபி ஆதரவு நிலையை அறுத்து எறிந்து விட்டு வருவாரா?
வந்தால் நல்லது.
கமல்-ரஜினி இருவரும் மாபெரும் சக்திகள் .இணைந்தால் தமிழகத்துக்கு நல்லது.
ரஜினி தனது வலதுசாரித் தன்மையையும்,கமல் அவரது இடதுசாரித்தன்மையையும் மறந்து விட்டு ஒன்று சேர்ந்தால் தமிழகம் புத்தொளி பெறும்.
டிவிட்டர் இணையதளத்தில் இருவரும் பரிமாறிக்கொண்ட வாழ்த்துச்செய்திகள் வார்த்தைகளாக இல்லாமல் உயிரானவையாக இருக்குமேயானால் நிச்சயம் விடிவுகாலம்தான்! தமிழகத்துக்கு தேவையான எல்லாமுமே வந்து சேரும்.புதுயுகம் பிறக்கும்.
,”கட்சி ஆரம்பித்து,இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து,தேர்தலில் முதல் முறையாக போட்டியிடப்போகும் மக்கள் நீதிமய்யத் தலைவர் என் நண்பர்கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றிபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என ரஜினி குறிப்பிட்டு இருந்தார் .
இதன் பொருள் என்னவென்பது சூப்பர் ஸ்டாருக்குத் தெரியாதா?