இந்தியாவின் பாதுகாப்பு அரசியல்வாதிகளின் கைகளில் இல்லை. நமது வீரமிகு ராணுவத்தின் கையில் இருக்கிறது என்பது இன்று அதிகாலையில் உலகுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோழைத்தனமாக புல்வாமாவில் பாக் . பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி.300 பயங்கரவாதிகளுக்கு எமலோக சீட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மிராஜ் 2000 வகை போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின.
12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. பலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தாக்குதல் நடந்த பகுதிகளில் பாலாகோட் பகுதி மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்காவா மாகாணத்தில் இந்தப் பகுதி ஜெய்ஷ் – இ- முகமது மட்டுமின்றி தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் சொர்க்கபுரியாக இருந்தது .
“பிராவோ இந்தியா” என வாழ்த்தி இருக்கிறார் ரஜினி.
“பயங்கரவாதிகளின் முக்கிய முகாம்களை நாசமாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பி இருக்கிறார்கள் நமது விமானப் படையினர்.வணக்கம் வீரர்களே!”என சல்யூட் அடித்திருக்கிறார் கமல்.
“அமைதி அகிம்சை என்பதெல்லாம் ஏன் மீது நீ காட்டும் அன்பை பொறுத்தது. இது என் தேசத்தின் வீரர்களின் தீரத்தைக் கொண்டாடுகிற நேரம்!” என மகிழ்ந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
நாமும் கொண்டாடுவோம் !
இந்தியா வெல்லட்டும்.!