பாக் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கச் சென்ற இந்திய விமானத்தை பாக் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. விங் கமாண்டர் அபிநந்தனை பாக்.ராணுவம் கைது செய்து இருக்கிறது. அவர் சென்னையை சேர்ந்தவர். அவரது தந்தை வர்தமான் இந்திய விமான படையில் பணியாற்றியவர்.
செய்தி சேகரிப்பதற்காக சேலையூர் மாடம்பாக்கத்தில் உள்ள ஜலவாயு விகார் இல்லம் சென்றபோது வாசலில் வர்தமான் சிறு போர்டு எழுதி வைத்திருக்கிறார்.
“பாக் ராணுவத்திடம் சிக்கி இருக்கும் எங்களின் மகனைப் பற்றி நாங்கள் பேசும் நிலையில் இல்லை.எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்”
உண்மைதானே!