கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். அதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவமும் முனைந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. அப்போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கி கொண்ட அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்து அவரின் வீடியோ பதிவையும் வெளியிட்டது.
அதில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் இந்தியாவில் தென்னிந்தியாவைச் சார்ந்தவன் என்பதைத் தவிர வேறு எதுவும் கூற முடியாது என்றும், மேலும் அவர் சென்ற விமானத்தின் பெயர், அவருடைய இலக்கு போன்ற எதையும் சொல்ல மறுத்துவிட்டார்.
இதையறிந்த நடிகர் கார்த்தி, மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்திற்காக எனக்கு பயிற்சியளித்து, பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் தந்தை தான். அவருடன் இன்னும் சில வீரர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம்.
மேலும், அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்திக்கிறேன். அவர்கள் வீரத்துடன் தொடர்ந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதால் தான் நாம் அனைவரும் குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.