விஷால் தலைமையிலான புதிய நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் மாதம் 3-ஆம் தேதி சென்னை ராமாபுரத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில்,தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .இது படதயாரிப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக 3 3 2019 அன்று சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் காலை பத்து முப்பது மணிக்கு நடக்கவிருந்த ஆண்டு பொதுக்குழு கூட்டம் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மாண்புமிகு நீதியரசர் திரு கே என் பாஷா அவர்களின் ஆலோசனைப்படி ஒத்திவைக்கப்படுகிறது மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்”இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தயாரிப்பாளர்சங்க உறுப்பினர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.