‘நட்பே துணை’ ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது,இவ்விழாவில்,
‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி, அஜித், பூவேந்தன், இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, தேவேஷ், பிரதீப் தினேஷ், சிவராக் ஷங்கர், ப்ரீத்தி நாராயணன், மற்றும் சுந்தர்.சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சுந்தர்.சி.பேசியதாவது,’நான் இணையதளத்தில் பார்த்து ரசித்த நிறைய பேர் இங்கே இருக்காங்க . விக்னேஷ், பிஜிலி ரமேஷ், தங்கதுரை, கோவை ராஜ்மோகன் சார், கோயம்புத்தூரில் இருந்து அந்த காலத்தில் பாக்யராஜ் சார், சத்யராஜ் சார் வந்தாங்க. அதுக்கு பின்னாடி மஞ்ச பையை தூக்கிட்டு நான் வந்தேன். எனக்கு பின்னாடி ஆதி வந்தார். எங்களை எல்லாம் விழுங்கி சாப்பிடுவது மாதிரி இப்ப ‘எருமசாணி’ விஜய் வந்திருக்கிறார்.மீசைய முறுக்கு படத்தில் முதல் 5 நிமிஷத்தில் ஷாராவும், ஆர்.ஜே. விக்னேஷும் என்னை எப்படி இம்ப் ரஸ் செஞ்சங்களோ அதே மாதிரி இப்ப விஜய் பண்ணியிருக்கிறார்.விஜய் இப்படியே காமெடி யனா நடிச்சா , தமிழில் மிகப் பெரிய இடம் காத்துக்கிட்டுஇருக்கு. ஆனால் நம்மாளுக விட மாட்டாங்க. அவரையும் ஹீரோவா நடிங்கன்னு கூட்டிட்டு போயிடுவாங்க. நம்மாளுங்க ஒரு நல்ல ஆர்டிஸ்ட்டை ஆர்டிஸ்ட்டாக இருக்க விட மாட்டாங்க. அவங்களுக்கு எது எல்லாம் தேவை இல்லையோ அதில் எல்லாம் கூட்டிட்டு போய் அவங்களின் வாழ்க்கையை காலி பண்ணி டுவாங்க.உஷாரா இருங்க, கொஞ்ச நாளாவது காமெடி பண்ணி நல்லா சம்பாரிச்சு,சந்தோஷமாக இருங்க விஜய். ஒருநாள் சாலிகிராமம் ஏரியாவுல காரில் போய்கிட்டு இருந்தேன் அப்ப ஒரு தெருவுல இந்த அனகா தீவிரமாக ஹாக்கி மட்டையை வைச்சு விளையாடிக்கிட்டு இருந்துச்சு . அதைப் பார்த்ததும் இப்படத்தை அவருக்காகவே சீக்கிரம் முடிங்கன்னு சொன்னேன் .என் மனைவி குஷ்பூவிடம் , ‘மீசைய முறுக்கு’ படம் வெற்றியடைந்தால் ஆதிக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வரும். ஒருவேளை படம் சரியாகப் போகலைன்னா அடுத்த படத்தை ஆதியை வைத்தே எடுப்போம் என்று கூறியிருந்தேன். ஆனால் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நான் நினைத்தது போலவே அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. அப்போது நான் ஐதராபாத்தில்படப்பிடிப்பில் இருந்தேன். ஆதி என்னைத் தொடர்பு கொண்டு, ஒரு கதை இருக்கிறது கேளுங்கன்னா என்றார்.
அந்த கதையைக் கேட்கும்போதே மிகவும் பிடித்திருந்தது. என் படத்தில் கருத்து சொல்லக்கூடிய படத்தைக் கொடுக்க முடியவில்லை. அப்படி சொன்னா அன்பே சிவம் மாதிரி ஆயிருது. அதனால அப்படி பட்ட கருத்துக்களை நான் சொல்வதில்லை அது எனக்கு குறையாவே இருந்தது. ஆனா,அதை ஆதி செய்ததால் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். ஆனால், பாடல்கள் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று ஒரு நிபந்தனை மட்டும் வைத்தேன். அதேபோல் மூன்று பாடல்களும் நெட்டில் வெளியாகி வெற்றி அடைஞ்சுருக்கு.
மேலும், இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவிடம் பிடித்த விஷயம் இது தான். இதுவரை பாண்டிச்சேரியை பற்றிய படம் வந்ததில்லை. அவர் கதை கூறும்போதே பாண்டிச்சேரியைப் பற்றிக் கூறியது பிடித்திருந்தது. ஆகையால் செலவைப் பற்றி கவலைப்படாமல் படம் தரமானதாக இருந்தால் போதும் என்று அவர்களிடமே விட்டுவிட்டேன்.என பேசினார்.