பாலாவின் முரட்டுப் பிடிவாதம் சினிமா உலகத்துக்கே தெரியும். பி.எஸ்.வீரப்பா படத்தில் காட்டுகிற விறைப்பு இங்கு நிஜத்தில் நடக்கும்.
“பார் தமிழ் சினிமாவே அசந்து போகிறவகையில் படம் எடுக்கிறேன்.”என்று சொல்லி ராமேஸ்வரத்தில் போய் உட்கார்ந்திருக்கிறார் பாலா.கூடவே கஞ்சா கருப்பு.
பாலாவின் ஸ்கிரிப்ட் ஒர்க் முடிந்ததும் படப்பிடிப்பு ஆரம்பம். ஆர்யாவின் கல்யாணம் முடிந்த கையுடன் ராமேஸ்வரம் போய்விடுகிறார். இந்த படம் கஞ்சா கருப்புக்கு ஒரு திருப்பு முனை என்பதாக பாலாவே சொல்லிவிட்டாராம். கருப்பு ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார்.