இது தமிழ்ப் பெண்களுக்கான படமா? அல்லது மாடர்ன் தாட்ஸ் ,கலாசார மாற்றம் விரும்புகிற பெண்களுக்கான படமா?
படத்தின் ஆரம்பம் முதல் முடிகிறவரை பெண்கள் போதையில் இருக்கிறார்கள். பீர்,பிராந்தி,ஒயின்,கஞ்சா என ஒவியாவும்,நண்பிகளும் திளைக்கிறார்கள்.ஆண்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதைப் போல இவர்களும் செக்ஸ் பற்றி பேசிக்கொள்கிறார்கள். ஒருவேளை இயக்குநர் அனிதா உதீப்க்கு பழக்கமான பணக்காரக் குடும்பத்தினர் பேசிக்கொள்வது தெரிந்திருக்கலாம்.ஓரினச் சேர்க்கை, லிவ் இன் ரிலேஷன் நியாயம் என சொல்கிறார்கள். “தன்னுடைய பங்களாவுக்கு இன்னும் திறப்பு விழா நடக்கல”என்றால் அவளுக்கு இன்னும் முதலிரவு நடக்கல என அர்த்தம்.
ஆண்கள் மட்டும் செய்யலாம் நாங்கள் செய்தால் தப்பா என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது..மீண்டும் முதல் பாராவை படித்து விட்டு பிறகு தொடருங்கள்.
ஓவியாவுக்கு குட்டை டவுசர்தான் பெரும்பாலும் காஸ்ட்யூம்.
இவரது நண்பிகளான மசூம்,மோனிஷா,ஸ்ரீ, பொம்மு லட்சுமி ஆகிய நாலுபேரும் முரட்டுக்குத்து ரேஞ்சுக்கு இருக்கிறார்கள்.ஆளுக்காள் ஒரு கதை வைத்திருக்கிறார்கள். அந்த சம்பவங்கள் பெரும்பாலும் கதையை 129 நிமிடங்களுக்குக் கடத்துகிறது. சுவையும் சுவாரசியமும் இல்லாத கதையை கடத்துவது போதையும் இரட்டை அர்த்தங்களும்தான்.
இந்த படத்துக்கு இசை அமைத்திருக்கிற எஸ்.டி.ஆர். கடைசியில் வந்து அவரது காதல் அனுபவம் பற்றியும் ஜாடையாக சொல்கிறார்.காதலனை விட்டு விலகி தனித்து ஆள் தேடுகிற ஓவியாவுக்கு அது சாதகமாக அமைந்து பச்சக் என கிஸ் பண்ணுகிறார்.
இந்த படத்தை நீங்கள் பார்க்கணுமா,அவசியமா என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள்.