காதல் என்கிற பெயரில் நாடு கடந்து,மதம் தாண்டி, தன்னிலும் பத்து வயது குறைவான அமெரிக்கரை கல்யாணம் செய்து கொண்டு போய் விட்டவர் பிரியங்கா சோப்ரா. கணவர் பெயர் நிக் ஜோன்ஸ் .பிரதமர் மோடி முன்பாக கவர்ச்சியுடன் கால் மீது கால் போட்டு அமர்ந்து பேசிய நடிகை என்கிற பெருமையும் உண்டு.
இவரது எந்த தகுதியைக் கொண்டு யுனிசெப் அமைப்பு ‘நல்லெண்ணத் தூதராக அறிவித்திருந்தததோ அதுக்கு மட்டுமே தெரியும்.
அண்மையில் பாக்.பயங்கரவாத அமைப்புகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது.
இதைப் பாராட்டி டிவிட்டரில் பிரியங்கா சோப்ரா “ஜெய்ஹிந்த் ” என பாராட்டி இருந்தார். இவரது உறவுகள் ராணுவத்தில் பணியாற்றியவர்கள்.
இவரது டிவீட்டருக்கு கண்டனம் தெரிவித்து ஆன்லைன் பெட்டிசன் அனுப்பப்பட்டிருக்கிறது.
“இந்தியா -பாக் இரண்டு நாடுகளுமே அணு ஆயுதம் வைத்திருப்பவை. இந்த நாடுகளுக்கு இடையில் யுத்தம் நடந்தால் இரண்டு நாடுகளுமே அழிவை சந்திக்க நேரிடும். இந்த நிலையில் ஒரு நாட்டுக்காக மட்டும் ஆதரவு தெரிவித்திருப்பது நல்லெண்ணத் தூதருக்கு நல்லதல்ல. எனவே பிரியங்காவை யுனிசெப் நல்லெண்ணத் தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என மனுவில் சொல்லப்பட்டிருக்கிறது.