இந்தியா என்பது ஒரே நாடு இல்லை. பலவித கலாசாரங்கள் சார்ந்தது இந்திய நாடு.
இந்த நாட்டைக் காப்பதற்கு எல்லா மாநிலங்களைச்சார்ந்த வீர்ர்கள் இந்திய ராணுவத்தில் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் தமிழரசன்..
திடீர் என ராணுவத் தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு.
“எல்லையில் பயங்கர வாத ஆபத்து. பாதுகாப்பதற்கு விரைந்து வாருங்கள்!”
வீட்டாருக்குத் தெரிந்தால் கவலைப்படுவார்கள்.இதனால் முதல் தகவலை நண்பர்களுக்கு சொன்னார் தமிழரசன்.
“எனக்கு ஏதாவது நடந்து விட்டால் தளபதி விஜய்யின் பக்கத்தில் எனது புகைப்படத்தை வைத்து போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”என்பதாக சொல்லிவிட்டு எல்லைக்கு சென்று விட்டார்.
இதை கேள்விப்பட்ட தளபதி விஜய் எல்லைக்கு சென்று விட்ட தமிழரசனுடன் போனில் பேசி இருக்கிறார்.
“உங்களுக்கு எதுவும் நேர்ந்து விடாது.நம்பிக்கையை கை விடாதீர்கள்.நீங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதும் நான் உங்கள் ஊருக்கு வந்து உங்களை சந்திக்கிறேன்” என சொல்லி இருக்கிறார்.
இந்த எனர்ஜியே பத்து பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளுவதற்கு ஊக்கியாக இருக்கப்போகிறது.
வாழ்க தமிழரசன்.!