பதவி கையில் இருப்பதால் அதை பயன் படுத்தி மக்களின் ஆதரவைப் பெற பாஜக போட்ட திட்டம்தான் பாக்.பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை.!
புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களின் படங்களை வைத்து தேர்தல் பிரசாரம் நடத்தியவர்கள் பிஜேபி கட்சியினர்.
இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டதால் அவர்களின் நிலையில் தடுமாற்றம் தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் கடுங்கோபத்துடன் டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
“மக்கள் இராணுவத்தினரின் பக்கமே நிற்கிறார்கள் .உங்களையோ,உங்களின் ‘கேங்கையோ’ மக்கள் நம்பத்தயாராக இல்லை.புல்வாமா மீது அரசியல் சாயம் பூசாதீர்கள். ராணுவத்தை மதியுங்கள். நீங்கள் ஒன்றும் வீரர் இல்லை.அம்மாதிரியான நம்பிக்கையை எதிர்பார்க்காதீர்கள்.! ஜெய்ஹிந்த்!” என கூறி இருக்கிறார்.