அன்பளிப்பு அறிவிப்புகள் வெறும் அறிவிப்புடன் நின்று விடுவது தமிழ்ச்சினிமாவுக்கு புதிது அல்ல.
இத்தகைய வள்ளல்கள் வாழ்கிற இடம்தான் கோடம்பாக்கம். இவர்களால் உண்மையாகவே வாரிக் கொடுக்கிறவர்களின் முகம்தான் சேதப்படுகிறது..ஆனால் இன்று வரலட்சுமி சரத்குமாரின் பிறந்தநாள் அறிவிப்பு செயல்பட்டு இருக்கிறது.
அவருடைய பிறந்த நாள் இன்று.5 ம் தேதி.
இதையொட்டி 35 பள்ளிகள், 12 கல்லூரிகளுக்கு பெண்களுக்கு அவசியமான சானிட்டரி பாட் மிஷின் அமைப்பதற்கான செலவுகளை ‘சக்தி பாதுகாப்பு அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
கோடிகளில் வாங்கும் முன்னணி நடிகைகளுக்கு இல்லாத சிந்தனை வரலட்சுமிக்கு இருப்பதற்கு காரணம் அவரது தந்தை சரத்குமார்தான் .
வாழ்க வளர்க,