காலங்கள் கடந்தாலும் இன்ன கேரக்டருக்கு இவர்தான் பொருந்துவார் என தேர்வு செய்வதற்கு ஹாலிவுட்டில் தனி இயக்குநர்கள் இருப்பார்கள்.
அந்த வழக்கம் தமிழ்ச் சினிமாவுக்கும் வந்திருக்கிறது.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சினேகாவுடன் ஜோடி போட்ட தனுஷ் தற்போது மீண்டும் சினேகா என இணைகிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு.
கொடி இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கம்.
தனுஷ்க்கு அப்பா-மகன் என இருவேடம்.
இதில் ஒருவருக்கு சினேகா ஜோடி. அது அனேகமாக அப்பாவாக இருக்கலாம் என கணிக்கலாம்.
தனுஷின் விருப்பமான இயக்குநர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.
கார்த்திக் சுப்பராஜின் ஆக்சன் படமும் கையில் இருக்கிறது. தனுஷ்க்கு இது அறுவடை காலம்.