வட இந்திய படத் தயாரிப்பாளர் போனிகபூருக்கு தல அஜித் குமார் நடிக்கும் படத்துக்கு ‘நேர் கொண்ட பார்வை ‘என புரட்சிக்கவியின் வரிகளை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
போனிகபூருக்கு எதிராக மும்பை திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பை சேர்ந்த பலர் புகார் செய்திருக்கிறார்களாம். பழைய கணக்குகளை இன்னமும் செட்டில் பண்ணவில்லையாம்.அந்த புகார்கள் இன்னமும் தீர்வு காணப்படாமல் இருப்பதால்தான் இந்த படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த வேண்டியதிருக்கிறது. இதனால் மும்பைத் தொழிலாளர்கள் வருத்தம் அடைந்திருப்பதாக சொல்கிறார்கள்.