விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.பி.பாரதி ரெட்டிக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்திற்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இயக்குனர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் .விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள்.
சுந்தரபாண்டியன் , ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் / காமெடியன் சூரி அவர்கள் 3 வது முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார். இவர்களுடன் நாசர் , அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள். R . வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கியது.












