அனேகமாக பெரிய பழுவேட்டயரையராக இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பாரோ என்னவோ!
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் ஓர் அமர காவியம். காலங்கள் கடந்து தமிழர் நாகரீகம் சொல்லிவரும் படைப்பு. இந்த புதினத்தை மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். அனேகமாக 2020- ல் படப்பிடிப்பில் இறங்குவார் என எதிர்பார்க்கலாம்.
கார்த்தி, விக்ரம்,ஜெயம் ரவி,ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள். இவர்களில் யார் வந்தியத் தேவனாக நடிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.மணியத்தின் ஓவியப்படி நடு வகிடும் .அரும்பு மீசையும் யாருக்குப் பொருந்துமோ ?கார்த்தியை தேர்வு செய்யலாம்.கார்த்தி -ஐஸ்வர்யாராய் குட் ஜாய்ஸ்.!
குந்தவியாக ஐஸ்வர்யாராய் நடிக்கலாம்.அதற்கான அழகு இருக்கிறது.ஏற்கனவே இன்னொரு படத்தில் இவர் மீது ஆசை கொள்பவராக விக்ரம் நடித்து விட்டதால் வந்தியத்தேவன் வாய்ப்பு கிடைக்காது என நம்பலாம்
பெரிய பழுவேட்டரையருக்கு அமிதாப்பின் உயரம்,கம்பீரம் அற்புதம்..கனத்த குரலில் பின்னணி பேசுகிற ஆளைப் பிடிக்க வேண்டும்.
ஆழ்வார்க்கடியான் அற்புதமான கேரக்டர். குள்ளத் தோற்றம்,பருத்த தொந்தி, யாரைத் தேடுவாரோ மணிரத்னம்.
இசைக்கு ஏஆர்ரகுமான்.நிலைய வித்துவான். பிரச்னை இல்லை.
கல்கியின் பெயரை காப்பாற்றும் வகையில் திரைப்படமாக கொண்டு வருவது எவரெஸ்ட் மீது கொடி நாட்டுவதைப் போன்றது.!
எவரெஸ்ட் அப்படியேதான் இருக்கும் கல்கியைப் போல.!