சினிமா என்பது மாயாஜால உலகம்.!
எதுவும் நடக்கலாம்,ஆனால் இப்படித்தான் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.
“உன் மதம்,என் மதம் சம்மதம் ஆக்கும் மன்மதம்” என்பார் பேராசிரியர் அப்துல்காதர்.
அந்த மன்மதம் அவ்வப்போது நிகழும் இடமே சினிமா உலகம்தான்.!
அப்படித்தான் ஆகிப்போனது அந்த டான்ஸ் மாஸ்டர் கதையும்.!
கல்யாணம் ஆனவர். பேர் சொல்கிற பிள்ளைகள். இப்படி வாழ்ந்தவரை காமன் விட்டு வைக்கவில்லை.
அம்புகளை விட்டு மற்றொரு டான்ஸ் மாஸ்டர் மீது மயங்கி விழ வைத்து விட்டான்.
இருவரும் குடும்பம் நடத்தியதில் ஒரு பிள்ளை. அதுவும் ஆண் பிள்ளை.
மொத்த இன்டஸ்ட்ரிக்கும் தெரியும்.
“எனக்கு வழி சொல்லு?” என பஞ்சாயத்துக்குப் போய் விட்டார் பெண் டான்ஸ் மாஸ்டர்.
நெடுங்காலமாக நடந்தது வழக்கு.
பிரபல தயாரிப்பாளரின் குடும்பத்தை சார்ந்த பெண்மணி தலையிட்டு பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்திருக்கிறார் புண்ணியவதி!
இருபது லட்சம் இழப்பீடு! அந்த பையனுக்கும் ஒரு வேலை.!
தாரமாக வாழ்ந்து அன்னையாக மாறியதற்கு இவ்வளவு கிடைத்ததே பெரியது என சந்தோஷமாக இருக்கிறார் பெண் டான்ஸ் மாஸ்டர்.