அஜீத் நடித்து வரும்( தல56) புதிய படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கிசுகிசுகிக்கிறது கோலிவுட் வட்டாரம். பழியை தூக்கி இப்போதைக்கு ஸ்ருதி மீதும், படத்தின் இயக்குனர் சிவா மீது போட்டு வந்தாலும் நிஜமே வேறு என்கிறார்கள். தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளமே கொடுக்கப்படவில்லையாம்.இருந்தாலும் ஒரு கட்டத்தில், படத்தின் டைரக்டரான சிவாவே தன் கையிலிருந்து பணத்தை போட்டு படப்பிடிப்பு செலவுகளை பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அவரும் கையை பிசைய வேண்டிய சூழ்நிலை. படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் தொடக்க நாள் முதல் இப்பிரச்சனை தொடர்வதால் அஜித் பெரும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.