“இதோ எனது இறைவன்” என நெஞ்சைக் கிழித்து ராமனைக் காட்டினானாம் அனுமன்.!
கற்பனையின் சொர்க்கத்தையே நம்மால் காட்ட முடியும்.!
ஆனால் மூடப்பட்ட மரணத்தின் வாசல் இதுதான் என அதனுடைய தடத்தைக் காட்டுகிறார் நடிகை சோனாலி பெந்த்ரே.!
புற்று நோய் வந்தால் கதையின் கடைசி அத்தியாயம் என்பார்கள். முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது ஆகவே ஆசைகள் எல்லாம் நிறைவேற்றிக்கொள்ளுங்கள் என ஆலோசனையை உற்றமும் சுற்றமும் சொல்லும்.
தற்போது கேன்சரை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும் என நிருபணம் ஆகி வருகிறது.ஆனால் அது எளியவர்களுக்கு இன்னும் எட்டாக்கனிதான்.
கோடீஸ்வரர்கள் குணம் பெறுகிறார்கள்.
அவர்களுக்கும் உயிர் ஒன்றுதானே! அதன் வலி தெரியும்தானே!
சோனாலி பெந்த்ரே. சிறந்த நடிகை. அவருக்கு புற்று நோய்.
மார்பக பகுதியைத் திறந்து அறுவை சிகிச்சை.
20 அங்குல நீளம். இடது மார்புக்கு கீழே.மார்பகத்தின் அடியில் இருந்து அடிவயிறு வரை தழும்பு.!
அதன் தடத்தை கேமரா முன்பாக காட்டி இருக்கிறார். மெட்டாலிக் வகையான ஆடையை கழுத்தை சுற்றி அணிந்து ‘தழும்பு’ தெரிகிற அளவுக்கு காட்டி இருக்கிறார்.
போற்றப்பட வேண்டிய தைரியம்.