காதலர்களாக இருந்தார்கள்.
கசந்து பிரிந்தார்களா,காலத்தின் கட்டாயத்தால் பிரிந்தார்களா?
தெரியாது.
எஸ்,டி,ஆர்., ஹன்சிகா பிரிவு எத்தகையது என்பது அவர்களது மனதுக்கு மட்டுமே தெரியும்.
“நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி!நாயகன் தானும் பட வடிவில் என்னோடு வந்தானடி”என கவியரசர் கண்ணதாசனின் பாடலைத் திருத்தி சொல்லுகிற அளவுக்கு ஹன்சிகாவுக்கு மகிழ்ச்சி.!
சிக்கலில் சிக்க வைத்து விட்ட மகா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் சிம்பு வருவதே ஹன்சிகாவை சிலிர்க்க வைத்திருக்கிறது.
“நானும் எஸ்.டி.ஆரும் மகாவில் இணைந்திருக்கிறோம்”என மகிழ்ச்சி தெரிவித்து தனது சோசியல் மீடியாவில் இணைந்த கரங்களுடன் படம் போட்டிருக்கிறார்.
அது ஆனந்த காதலின் அடையாளமாகத் தெரியவில்லை.
ஹன்சிகாவின் 50 வது படம் என்பதால் தனது முன்னாள் காதலிக்கு எஸ்.டி.ஆர். செய்கிற உதவி என்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
மீண்டும் சொல்கிறோம் அது காதலா என்பதை அவர்கள்தான் பகிரங்கமாக சொல்ல வேண்டும்.