ரஜினி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது! ரஜினியின் அடுத்த படத்திற்கான வேலைகள் ஒருவழியாக தொடங்கிவிட்டது. ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் கபாலி.படத்தின் படபிடிப்பு வேலைகள் தற்போது மின்னல் வேகம் பிடித்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போட்டோசூட் ஏ.வி.எம்மில் நடத்தப்பட்டது.இப்படத்தில் ரஜினி சால்ட் & பெப்பர் லுக்கில் தோன்றவிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த தாதா வான ரஜினி மலேசிய டானாக மாறும் கதையே கபாலி என்கிறார்கள். இப்படத்தின் ரஜினிகாந்த்தின் கெட்டப் வருகிற விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.