“செடியில் ஆடும் ஒரு ரோஜா,அது சேலை கட்ட வில்லை” என்பார் கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன்.
அவர் பெண்மையை எந்த அளவுக்கு மென்மையாக சொல்லியிருக்கிறார். அவர் இருந்திருந்தால் ஸ்ரீ தேவியின் மகள்ஜான்வி கபூர் வாள் பிடித்து கேக் வெட்டியதை எப்படி பாடி இருப்பாரோ?
அண்மையில் ரவுடிகளின் கூட்டத்தினர் தங்களது தலைவனின் பிறந்த நாள் கேக்கை பட்டா கத்தியினால் வெட்டி சோமபானம் குடித்துக் கும்மாளமிட்டிருக்கிறார்கள்.
இதற்கு சற்றும் சளைக்காமல் நெடிய வாள் கொண்டு ஜான்விகபூர் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்.அன்று இரவு பார்ட்டி.!