வைதேகியின் கண்களுக்கு மாயமான் தெரிந்ததைப் போல இன்று திமுக அதிமுக கட்சிகளுக்கு தெரிகிற மாயமான்தான் தேமுதிக,.
கேப்டன் என்கிற ஒற்றை மனிதனின் கடுமையான உழைப்பில் உருவான இயக்கம்தான் தேமுதிக.
அவரது மன்றத்தினரை கட்டுக்கோப்பான ராணுவமாக வளர்த்த பெருமை விஜயகாந்த் ஒருவருக்கு மட்டுமே உரியது. அவரது உழைப்பின் பலனை அரசியலில் அனுபவிக்க இன்று யார் யாரோ வருகிறார்கள்.
தேர்தலில் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவதற்கு அங்கே சிறந்த அரசியல் ஆலோசகர்கள் இல்லாமல் போய் விட்டார்கள்.
ஒரே நேரத்தில் எதிரெதிர் அணியினரிடம் பேசுகிற அளவுக்கு தேமுதிகவின் நாகரீகம் இருக்கிறது.
“துரை.முருகன் திமுகவைப் பற்றி என்னிடம் பேசியதைச் சொன்னால் அசிங்கமாகிவிடும்”என்கிறார் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ்.
“துரை.முருகனிடம் தேமுதிகவை சேர்ந்த அனகை முருகேசன்,இளங்கோவன் இருவரும் பெர்சனலாகத்தான் பேசி இருக்கிறார்கள்.கட்சி தொடர்பாக பேசவில்லை”என அழுத்தம் கொடுத்து சுதீஷ் பேசியதை பக்கத்தில் இருந்த முருகேசன், இளங்கோவன் இருவரும் மறுக்கவில்லை.
அவர்களும் அதையே சொன்னார்கள்.
ஆனால் துரை முருகனோ“என்னிடம் பெர்சனலாகப் பேசுவதற்கு எத்தகைய முகாந்திரமும் இல்லை.அவர்களை முன்னும் பின்னும் பார்த்ததில்லை என்கிறார். இதுமட்டுமல்ல “தேமுதிக தொண்டர்கள் திமுக கூட்டணியைத்தான் விரும்புகிறார்கள். மாவட்ட செயலாளர்கள் அதிமுக கூட்டணியை விரும்புகிறார்கள்” என்று அவர்கள் சொன்னதாகவும் துரை முருகன் சொல்கிறார்.
ஆக தொண்டர்கள் பக்கம் தேமுதிகவின் செயலாளர்கள் இல்லை. அவர்கள் பணபலம் மிகுந்த அணியை விரும்புவதில் ஆச்சரியம் இல்லைதான்.! ஆனால் முடிவு எடுக்கமுடியாமல் திணறுவது ஏன்?
பாமகவை விட குறைந்த எண்ணிக்கையை தேமுதிக பெறுவதற்கு தயார்தான் ஆனால் வேறு வகையில் காம்பரமைஸ் பண்ணுவதில் அவர்களுக்கு பிரச்னை என்பது புரிகிறது.
அது கேபினட் பெர்த் ஆக இருக்கலாமா?