கொம்பு முளைக்காத நடிகர்களில் மக்கள் செல்வன் விஜயசேதுபதியும் ஒருவர்.!
அண்மையில் ஹைதராபாத்தில் குஞ்சாலி மரக்கார் என்கிற மலையாளப் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது அங்கு சென்றிருக்கிறார் மக்கள் செல்வன்.
இயக்குநர் பிரியதர்ஷன்.
கேரவனில் இருந்த மோகன்லாலை சந்திக்க சொல்லியிருக்கிறார்கள்.
“வேணாம்.நான் அவரோட ஷூட்டிங்தான் பார்க்க வந்தேன்” என சொல்லி விட்டு இயக்குநரின் பக்கமாக அமர்ந்து விட்டார்.
“மோகன்லால் சாரிடம் நிறைய நடிப்பு கத்துக்கணும்” என ஒரு மாணவனாக சொன்னது தயாரிப்பு கண்ட்ரோலர் சித்து பனக்காலுக்கு மிகவும் பிடித்துப் போனது.
ஒரு மலையாள நடிகருக்கு பிற மொழி நடிகர்களும் ரசிகர்களாக இருப்பது பெருமையாக இருக்கிறது என பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் நடிகர் சிவாஜி கணேசனின் எல்லா மாநிலங்களும் நடிகர்கள் ரசிகர்களாக இருந்தார்கள். அந்த பெருமை எங்களுக்கும் இருக்கிறது.