மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு பிரசாரகி கிடைத்திருக்கிறார்.
தமிழ்ச்சினிமாவில் நெடுங்காலமாக இருக்கிற கோவை சரளா இன்று உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்திருக்கிறார்.
அகில இந்திய மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் இந்த இணைப்பு நடந்தது.
“எனக்குப் பின்னர் மகளோ,மைத்துனரோ அரசியலுக்கு வரமாட்டார்கள்.அரசியலில் தங்களின் சவுகரியத்துக்காக வேற்று மாநிலத்தவர்களை இங்கு பணியில் அமர்த்துகிறார்கள்”என்கிற கடுமையான குற்றச்சாட்டையும் கமல் வைத்தார். தமிழன் என சொல்லி வாக்கு வேட்டை நடத்துவதையும் கண்டித்திருக்கிறார்,”
தமிழ் மாநிலம் மெல்ல மெல்ல தனது சுயம் இழந்து வருகிறது.பிற மாநில ஆக்கிரமிப்பு என்றே சொல்லலாம்.