பண்டிதருக்கும்,பாமரருக்கும் புரிகிற தமிழில் பாடலை எழுதுகிறவர்களில் கவிஞர் விவேகாவும் ஒருவர். சீரிளம் திறம் வாய்ந்த தமிழை சிதைக்கிற வழியில் சில உச்ச நடிகர்களுடன் பாடல் எழுதும் சிலரும் சேர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் விவேகா மொழிக்கு சிறப்பு சேர்ப்பவர். சிபாரிசுக்கு ஆள் பிடிக்க மாட்டார்.
கடாரம் கொண்டான் படத்துக்கு ஜிப்ரான் இசையில் அவர் எழுதிய ஆண்மை மிகு வரிகளுக்கு ஆவேசமுடன் குறள் எடுத்து பாடியிருக்கிறார் சீயான் விக்ரம்.
உலகநாயகன் கமலின் தயாரிப்பு.
“தீச்சுடர் குனியுமா?
தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா?
ஏறிவா மேலே மேலே”
இது தொடக்க வரிகள்.