கட்சியை இன்னமும் தொடங்காத நிலையில் மன்றமாகவே இயங்கி வரும் ரஜினி மக்கள் மன்றம் உறுப்பினர்களுக்கு இன்று அவசர அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
பல இடங்களில் மக்களின் பிரச்னைகளுக்காக மக்களே நேரடியாக போராட்டங்களில் குதித்திருக்கிறார்கள்.
குறிப்பாக குடிதண்ணீர் பிரச்னை .
அதிகாரிகளிடம் முறையிட்டும் எதுவும் பலன் கிடைக்காததால் பெண்களே சாலைக்கு வந்து போராடி வருகிறார்கள்.
இந்த போராட்டங்களில் எல்லா கட்சியை சேர்ந்தவர்களும் தங்களது கட்சி முத்திரை இல்லாமல் போராடி வருகிறார்கள்.
அவர்களில் ரஜினி மன்றத்தினரும் இருக்கிறார்கள்.
சில இடங்களில் அரசியல்கட்சிகளும் போராட்டத்தில் குதித்திருக்கின்றன.
இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் தனது மன்றத்தினருக்கு கண்டிப்பான உத்திரவை பிறப்பித்திருக்கிறார்.
“மக்கள் நலம் சார்ந்த பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணவேண்டும்.மக்கள் மன்ற தலைவரின் அறிவிப்பின்றி எந்த கூட்டமோ போராட்டமோ நடத்தக் கூடாது” என கட்டளையிடப்பட்டிருக்கிறது.
ஒரு வகையில் இது அதிமுக அரசுக்கு ஆதரவான அறிக்கை என்பதாகவே கருதலாம்,