“சொந்த நலனுக்காக தகுதியற்றவர்களையெல்லாம் வளர்த்து கல்லாவை நிரப்பிக் கொள்வதுதான் பெரும்பாலான ஊடகங்களின் முழு நேரப்பணியாக இருக்கிறது.
இனியும் அத்தகைய தவறுகளை செய்யாமல் திருத்திக்கொள்வது அனைவருக்கும் நல்லது. நடந்ததை எண்ணி புலம்பாமல் இனியாவது நல்லவர்களை வளர்த்தெடுங்கள்.”
இத்தகைய குற்றச்சாட்டினை குமுறலுடன் சொல்லியிருப்பவர் சாட்சாத் தங்கர்பச்சான்தான்!
தகுதியற்றவர்கள் யார்,நல்லவர்கள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு தங்கர்பச்சான் போன்றவர்களுடைய கடமையாகும்.
சாதி சார்ந்து நில்லாமல் மத ரீதியான பார்வை இல்லாமல், இன்று யார் நிற்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியாது போகுமா?
நேற்றுவரை ஊழல் வாதிகளாக இருந்தவர்கள் இன்று பரிசுத்தம் பெற்றுவிட்ட அதிசயம் தங்கர் பச்சானுக்கு தெரியாது இருக்காது.
சாட்டையை சுழட்டுங்கள்! சுளீரென விழட்டும்