பொதுவாக திரைப்பட விழாக்களில் ஜெய் கலந்து கொள்வதில்லை. அவரது படங்களின் புரமொஷன்களுக்கும் வர மாட்டார். அம்மா கிரியேஷன் சிவா பகிரங்கமாகவே குற்றம் சாட்டிப் பேசினார்.
ஆனால் அதெல்லாம் அந்தக் காலம்.
ஜெய் விழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
நீயா 2 படத்திலிருந்து இந்த நல்ல பழக்கம் ஆரம்பித்திருக்கிறது.
அண்மையில் பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டருக்கு வந்திருந்த ஜெய்யை மடக்கி மதமாற்றம் பற்றி கேட்கவேண்டும் என சில ஊடகத்தினர் திட்டமிட்டு காத்திருந்தனர்.
படப்பிடிப்பிலிருந்து இயக்குநரின் அனுமதியுடன் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்ததினால் ஊடகத்தினரிடம் சிக்காமல் பறந்து விட்டார்.