“சாதிகள் இல்லையடி பாப்பா’ன்னு பாப்பாவுக்குத்தானே பாரதி சொன்னான் .வயசானவங்களுக்கு இல்லியே “
நம்மாளு எப்படி கண்டுபிடிக்கிறான் பாருங்க, பாரதிக்கும் இப்படி விளக்கம் கொடுக்க ஆள் இருக்கான் சார்!
என்னதான் இஞ்செக்சன் போட்டாலும் மாறவே மாட்டார்கள். சல்லாபங்களுக்கு சாதி பார்க்காதவர்கள் உறவுகள் வரும் போது மட்டும் சாதிக்கு அதிக உரிமை தருவார்கள்.
உறியடி 2 படத்தில் இயக்குநர் விஜயகுமார் சாட்டையை சுழற்றுவதே சாதியத்துக்கு எதிராகத்தான்.!
“கம்யூனிச சிந்தனையோ .புத்தக வாசிக்கிற பழக்கமோ இல்ல. நான் சினிமாவ நேசிக்கிறேன்.இந்த சக்தி வாய்ந்த மீடியம் வழியாக ஆத்மார்த்தமாக சொல்ல நினைப்பதை சொல்றேன் அதுதாங்க எனது திறமைக்கான அடையாளம்.களத்தில் எறங்கிப் போராடுவதை விட சினிமா மீடியம் வழியாக சொன்னா ரீச் அதிகம்.எனக்குள்ள படைப்பாளிய வெளியே கொண்டு வரணும்..இன்னிக்கி சாதிதான் பெரிய பிரச்னை.! ” என்கிற விஜயகுமாருக்கு உறியடி 2 எப்படி சாத்திய மாயிற்று?
“2 டி ராஜசேகர் சாரை பார்த்து கதைய சொன்னேன்.அவருக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது.படம் பண்ணலாம்னார்.
சூர்யா சாரை சந்தித்து கதையில் சில மாறுதல்களுடன் முழுக் கதையையும் சொன்னேன்.
சில கேள்விகள் கேட்டார். அது அவசியமான கேள்விகள்தான். பதில் சொன்னதும் அவருக்கு பிடிச்சுப் போனது. கண்டிப்பா படம் பண்றோம்னார். ஒரு படைப்பாளிக்குரிய சுதந்திரம் எனக்கு முழுசா கிடைச்சது.படம் அருமையா வந்திருக்கு. இந்த சம்மருக்கு உறியடி 2 ரிலீஸ்”
விஜயகுமாரின் முகத்தில் ஜோதி பிரகாசம்.கோடிப் புன்னகைக்கு சமம்.!