கடந்த வருடம் பிப்ரவரியில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார் நடிகர் கமல் ஹாசன்.
இக் கட்சிக்கு கடந்த ஜூலை மாதம் இந்தியதேர்தல்
ஆணையம் அங்கீகாரம் அளித்தது.
அதைத் தொரடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள அவர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்.
சமீபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனுக்களை கமல்ஹாசனிடம் நேரில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில்,கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம், டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் “மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்.”என்று கூறி இருக்கிறார்.