ஈரமாக இருந்த ‘யெல்லோ பாஸ்பரஸ்’ காய்ந்து நீர்ச்சத்து இழந்து விட்டதோ என்னவோ,புகையத் தொடங்கி இருக்கிறது.
எல்லோரும் தன்னையே பார்ப்பதைப் போன்ற உணர்வோ..என்னவோ!
கவிஞர் பா.விஜய் சொன்ன கருத்து பற்றிக்கொண்டு விட்டது பெரு நெருப்பாக.!
“சின்னதாய் ஒரு புன்னகை
சிநேகமாக பூக்கப் போய்
ரெண்டு ஜென்மம் முன்னால்
என்னை அணைத்தார் என்று
‘மீ டூ ‘வில் சொன்னாலும் சொல்வார்“–இது பா.விஜய்யின் கருத்து.
பொங்கிவிட்டார் பாடகி சின்மயி.

கவிஞர் பா.விஜய் அய்யா, உங்களை ஒரு காலத்தில் அண்ணா என்று பாவித்ததும் அழைத்ததும் தவறுதான். எக்காலமும் நீங்க என்னை தங்கையாய் பார்க்கவில்லை என்று ‘ப்ரூப்’செய்தமைக்கு மிக்க……நன்றி! ஆக மொத்தம் ஒரு செக்சுவல் சூரையாடிக்கு சப்போர்ட் பண்ணி கிளாப்ஸ் வாங்குகிற நிலைமை தமிழ் நாட்டில” என்பதாக டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
இதை வெட்டியும் ஒட்டியும் கருத்துகள் ஏராளம்.!
அதில் ஒன்று.
“மேடம்,ஒன்று மட்டும் புரியிது,உங்களை எல்லோருமே அயிட்டமாக நினைச்சிட்டாங்க போல.உங்களை மட்டும்தான் எல்லோரும் கூப்பிட்டு இருக்காங்க. அப்படி நீங்க என்ன பண்ணீங்க? அப்டி நீங்க நல்லாவும் இல்ல.நீங்க பப்ளிசிட்டிக்காக இப்படி பண்றீங்களா? கடவுளுக்குத்தான் தெரியும்.”என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
குளிர்காலம் போய் கோடை வெயில் கொளுத்துகிற வேலையில் இப்படியும் ஒரு பஞ்சாயத்தா?