சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் , தமிழ் திரைப்படமான ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
கடந்த 8 நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு மொழிகளை சேர்ந்த சுமார் 170 உலக திரைப்படங்கள் திரையிட்டு காட்டப்பட்டது.. சிறந்த தமிழ்ப்படங்களை தேர்வு செய்யும் குழுக்களில் ஒருவராக பொறுப்பு வகிக்கும் இயக்குனர் பி.வாசு, ‘தமிழில் சிறந்த படமாக ‘குற்றம் கடிதல்’ தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.. முற்றிலும் புதுமுகங்கள் நடித் துள்ள இந்த படத்தை இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ளார்.
மேலும் அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது ,இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூ க்கும், சிறப்பு ஜூரி விருது இயக்குனர் பார்த்திபனுக்கும், வழங்கப்பட்டது. மேலும், பூவரசம் பீப்பி, சதுரங்கவேட்டை ஆகிய படங்களுக்கும் விருதுகள் வழங்கபட்டது.