மைசூர்பாகுவை பிட்டு வாயில் போட்டால் அப்படியே ருசியோடுகரைந்து வெண்ணெயாக தொண்டைக்குள்வழுக்க வேண்டும்.
அதான்டா மைசூர் ‘பாகு!’ பாக்கு மாதிரி கடித்தால் வெளங்குமா?
காஞ்சனா ,1,2 ஆகிய இரண்டு படங்களையும் பாகு மாதிரி கொடுத்த இயக்குநர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 -ஐ முந்தைய காஞ்சனாக்களை விடஇனிமையாக கொடுக்க வேண்டாமா. ருசியான கவிதையாக வடித்திருக்கிறாராம்.
இதில் ஒரு முக்கிய செய்தி இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய விலைக்கு காஞ்சனா 3 விற்பனை ஆகி இருக்கிறது. இதனால் கூடுதலாக கவனத்தை ஈர்த்தாகவேண்டுமே என்கிற கவலை மாஸ்டருக்கு.!
படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் ஒரு சாங் வைக்கலாமே என்கிற சிந்தனை! திட்டமிட்டு இருக்கிறார்.
ஏப்ரல் 18 -ல் படம் ரிலீஸ் என்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேர்தலும் அதே நாளில் என்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதனால் மாஸ்டருக்கு சற்றே தயக்கம். ஒருநாள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வெளியிட்டால் என்ன?
தொடர் விடுமுறை ஆறு நாட்கள் என்கிறார்கள்.பலன் பெரிய அளவில் கிடைக்குமே!