சங்கத்து சட்டாம்பிள்ளைக்கே குடைச்சல் என்றால் …?
சினிமாப் புள்ளிகள் ஆடிப்போய் இருக்கிறார்கள்.
“திருப்பூர் சுப்பிரமணியத்தை கூப்பிட்டு சிக்கலை தீர்த்து வைய்யா “என்று சூப்பர் ஸ்டாரே சொல்லும் அளவுக்கு பிரபலமானவர்தான் திருப்பூர் சுப்பிரமணியம். சட்டாம் பிள்ளை மாதிரி மதிக்கப்பட்ட இந்த மனிதரை யாரோ மாட்டி விட்டிருக்கிறார்கள்.
இவருக்கு பல தியேட்டர்கள் சொந்தம்.விநியோகஸ்தர். பண உதவிகளும் செய்து வந்தார்.அண்மையில் முக்கியமான சினிமா பைனான்சியர்களை ஒருங்கிணைத்து ஒரு சங்கத்தை தொடங்கி அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். நடிகர்களை தங்களின் பிடியில் வைத்துக் கொள்வதற்கே இந்த சங்கம் என்கிற கருத்து நடிகர்கள் ,மத்தியில் இருக்கிறது. இதனால் யாரோ சில நடிகர்கள் போட்டுக் கொடுத்திருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பி இருக்கிறது.
இவருக்கு சொந்தமான 17 இடங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் வளைத்து வளைத்து சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
விளைவு என்னவென்பதை இனிதான் பார்க்கவேண்டும்.