கூடி களித்து கும்மாளமிட்டதில் எக்குத்தப்பாக யாரோ வாயை விட வம்பாகி இருக்கிறது.
தன்னை நடிகர் விமல் அடித்து உதைத்தாக தெலுங்கு நடிகர் அபிசேக் புகார் கொடுத்திருக்கிறார்.இதனால் விமல் அவரது நண்பர்கள் உள்பட நாலு பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
9-ம் தேதி நள்ளிரவு இந்த அடிதடி நடந்ததாக சொல்லப் படுகிறது..கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்துக் கொண்டு விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே போதையில் இருந்திருக்கிறார்கள்.
மதுபோதையில் நடந்த சண்டை நீதி மன்றம் வரை போகுமா?
|