அரசியல் என்பதற்கு அநாகரீகம் என இன்னொரு பெயரும் சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால் அசிங்கம் என்பது தேர்தல் காலங்களில் சர்வ சாதாரணமாக நடக்ககூடியதுதான். நாலாந்தர அரசியல் வாதிகளினால் மட்டரகமாக அரசியல் தலைவர்கள் விமர்சிக்கப்படுவார்கள்.
காலம் காலமாக இருப்பதுதான்.!ஆளும் கட்சியின் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதால் முதல் அசிங்கம் அங்கிருந்துதான் வரத்தொடங்கும்.
அதற்கு பதில் சொல்கிறேன் என சொல்லி எதிர்க்கட்சிகளின் தரப்பில் இருந்து அடுத்த அசிங்கம் வீசப்படும்.
இப்படி இரு தரப்பினருமே அசிங்கங்களை அள்ளி பூசிக் கொள்வார்கள்.
இவர்களில் யாருக்கு முதல் பரிசு என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
அண்மையில் நிகழ்ந்த விமானப்படைத் தாக்குதலில் பாக் பயங்கரவாதிகள் 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என செய்திகள் வந்தன.
இதைப்பற்றி ராணுவ அதிகாரி ஒருவர் “இந்த எண்ணிக்கை பற்றி அரசுதான் சொல்லவேண்டும். இலக்கு சரியாக தாக்கப்பட்டதாஇல்லையா என்பதைப் பற்றிதான் நாங்கள் சொல்லமுடியும்”என சொல்லிவிட்டார்.
ஆனால் பாகிஸ்தான் அரசு “எங்கள் வனப்பகுதியில் குண்டு வீசி மரங்களை நாசமாக்கிவிட்டார்கள்”என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.
இதை குறிப்பிட்டு மரணமடைந்த பயங்கரவாதிகளைப் பற்றிய விவரங்களை ராகுல் காந்தி கேட்டிருக்கிறார்.அதாவது ஆதாரம் கேட்டிருந்தார்.
இப்படி கேட்டது சரியா இல்லையா என்பதை பிரதமர் மோடி விளக்குவதுதான் நியாயம்,நேர்மை.!
ஆனால் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே என்பவர் கண்ணியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டார்.
“ராகுல் காந்தி ஒரு பிராமணர்தான் என்பதற்கான டி.என்.ஏ சர்டிபிகேட் காட்ட வேண்டும்.”என்றதுடன் நில்லாமல் முஸ்லீம்-கிறித்தவ கலப்பு என சொன்னதுதான் ….ச்சே!
“பரதேசி,பாரீனர் “என்றெல்லாம் சொன்னவர்தான் இந்த மாண்புமிகு மத்திய அமைச்சர். எனவே ஆனந்தகுமார் ஹெக்டேயின் தரம் எத்தகைய உயர்வானது என்பதையும் சிறிது கூட வருத்தப்படாத பி.ஜே.பி.யின் அரசியல் நாணயம் பற்றியும் அறிந்து கொள்ளவே இந்த பதிவு.!
சிந்திப்போமாக.
56