சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஹைக்கூ’ படத்தின் தலைப்பை வரிச்சலுகைக்காக தற்போது பாண்டிராஜ் தன் முதல் படமான ‘பசங்க’ படத்தின் இரண்டாம் பாகம் என்பதைப்போல் ‘பசங்க&2’ என்று வைத்துள்ளார். ‘பசங்க-2’ என்ற டைட்டிலுக்குக் கீழே ‘ஹைக்கூ’ என்ற ஆங்கில வார்த்தையும் போடப்பட்டபோஸ்டரையும்ட்விட்டரில்வெளியிட்டிருக்கிறார்கள.சூர்யா, அமலாபால் நடித்திருக்கும் இப்படத்தில் பிந்து மாதவி, கார்த்திக் குமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் அக்டோபரில் வெளியாகும் என்கிறது படத் தரப்பு!