ஒப்பாரிதான் இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.
காலப்போக்கில் எழவு வீட்டில் இன்ஸ்ட்ருமென்ட் வச்சு சினிமாப்பட ஒப்பாரி பாடி செத்த பாடியை சிவலோகத்துக்கு அனுப்பினாலும் அனுப்புவார்கள்.
இப்பவே கல்யாண வீடுகளில் பார்த்தால் பெரிய பாடகர்கள் பாடிக் கொண்டிருப்பார்கள்..விருந்தினர் கவனமெல்லாம் பந்தியில் என்னன்ன அயிட்டங்கள் அல்லது அரட்டையில் தான் இருக்கும்.
ஒப்பாரியை கிண்டல் பண்ணுவதற்கு ‘பந்தலிலே பாவக்கா தொங்குதடி’ பாட்டும் உண்டு.
ஆனால் எந்த பெண் அல்லது ஆண் எழுதியது என்பது தெரியாமலேயே அற்புதமான வரிகளில் ஒப்பாரியை மூதாட்டிகள் பாடி இருக்கிறார்கள்.
அதை முன்னிலைப்படுத்துவதில் இயக்குநர் ரஞ்சித்துக்கு ஆர்வம்.
தமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருக்கிறார்
அந்த வகையில் சமீபத்தில் அவரின் “நீலம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைத்து நடத்திய “வானம் கலைத் திருவிழா” மூன்று நாள் நிகழ்வு பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது..
“தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” மற்றும் “ரூட்ஸ் 2” குழுவினர் ஒருங்கிணைத்த “ஒரு ஒப்பாரி ஷோ” நிகழ்ச்சி மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.சாஸ்திரிய சங்கீதம் மட்டுமே சபை ஏறும் என்கிற கட்டுப்பாடு உடைபட்டது வரவேற்கத்தக்கதாகும்.
நிகழ்த்துக் கலைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஒப்பாரியானது, முதல் முறையாக ஒரு பொது மேடையில் அரங்கேறியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.
சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள ஒப்பாரிக் கலைஞர்கள் பங்குபெற்று பாடினார்கள்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்து பார்க்க வந்திருந்த பார்வையாளர்களைத் தாண்டி ஆந்திரா, கேரளா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து கூட இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மட்டுமே வந்திருந்தவர்களும் இருந்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில், பங்குபெற்ற இசைக் கலைஞர்களை இயக்குநர் பா.இரஞ்சித் கௌரவித்தார். இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய “மியூசிக் அகாடமி” நிர்வாகத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.