மும்பையில் இருக்கிற சினிமா சங்கம் அத்தனையும் ஒட்டு மொத்த கடுப்பில் இருக்கிறது போனி கபூர் மீது.!
எல்லோருக்குமே பணம் செட்டில் பண்ணவேண்டிய பாக்கி !
எப்படியாவது கணக்கை முடித்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இந்திப்படத்தில் ஸ்ரீ தேவியுடன் ‘தல’ அஜித் நடித்துக் கொண்டிருந்தபோது தங்களுக்குப் படம் பண்ணித் தருமாறு ஸ்ரீ தேவி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த கோரிக்கையைஏற்றுக்கொண்டதால் தான் தற்போது ‘நேர்கொண்டபார்வை என்கிற படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கிறார். இது இந்திப்படமான பிங்க்கின் தழுவல்.
தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 18 ம் தேதியில் ஓட்டுப்போடும் கடமை படக்குழுவினருக்கு இருப்பதால் அதுநாள் வரை இடை விடாமல் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி இந்தப்படம் வெளிவரும் நாளை மிகவும் ஆசையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்பவே வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.