CAST AND CREW
Production: Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh, Kalpathi S. Suresh
Cast: Arvind Swamy, Ganesh Venkatraman, Jayam Ravi, Nayanthara
Direction: M. Raja
Screenplay: M. Raja
Story: M. Raja, Subha
Music: ‘Hip Hop Tamizha’ Aadhi
Rating 3/5.
ஜெயம் ரவி, அவரது அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் நடித்து நான்கு ஆண்டுஇடைவெளிக்கு பின் வெளியாகியுள்ளதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகளோடு திரைக்கு வந்திருக்கும் படம்தனி ஒருவன்.
போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரியான ஜெயம் ரவி, ஐ.பி.எஸ். படிக்கும் காலத்திலிருந்தே நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டுமென்று, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தனது ஐ.பி.எஸ் நண்பர்களுடன் சேர்ந்துகையும் களவுமாக பிடித்து தாம் தான் செய்கிறோம் என்பது தெரியாவண்ணம் பல நல்ல விஷயங்களை நாட்டிற்காக செய்கிறார். ஜெயம்ரவி ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, மருத்துவத் துறைஆராய்ச்சியாளர் என்ற போர்வையில், பின்னால் இருந்து அரசியல்வாதிகளையும் அதிகாரவர்க்கத்தையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டு அனைவரையும் ஆட்டிவைக்கும் அதிபயங்கர மூளைக்குச் சொந்தமான அரவிந்த்சாமி தான், தான் அழிக்க வேண்டிய எதிரி என்று தீர்மானிக்கிறார். அரவிந்த்சாமியாலும், அவரது ஆட்களாலும் செய்யப்படும் மனித உயிர்களை பறிக்கும் இமாலய ஊழல்களை கண்டுபிடித்து ஐ.பி.எஸ். அதிகாரி ஆனதும் கொடிய வியாதிக்கான மருந்துகளை மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கக்கூடிய திட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றி கொழித்த லாபம் சம்பாதிக்க சித்தார்த் அரவிந்த்சாமி போடும் திட்டத்தை மித்ரன் ஜெயம்ரவி எப்படி முறியடிக்கிறான் என்பதுதான் மீதிக் கதை. இதை எதிர்பாராத திருப்பங்களுடனும், தனக்கே உரிய விறுவிறுப்பான முடிச்சுகளுடனும், ஜெயம் ராஜா அசத்தலான திரைப்படமாக்கியுள்ளார்.
ஜெயம் ரவி, மிடுக்கான ஐ.பி.எஸ்., போலீஸ் அதிகாரியாக படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் நீக்கமற நிறைந்து விடுகிறார். ஆக்சன் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் கூட போலீஸ் அதிகாரியின் மிடுக்கு குறையாமல் மிரட்டியிருக்கிறார் ஜெயம் ரவியின் திறமைக்கு முழுத் தீனி போட்டிருக்கும் படம் இது. புத்திசாலிகளைவிட புத்திசாலித்தனமாக யோசிப்பவராக அனைவரையும் விட மிக நேர்த்தியாக விஷயங்களை அணுகுபவராக இருக்கும் ‘மித்ரன்’ பாத்திரத்துக்கு மிகச் சரி! தொடக்கத்தில் சில சாதாரண ரொமான்ஸ் காட்சிகளுக்குப் பிறகு மையப் புள்ளியில் நுழையும் திரைக்கதை இறுதிவரை பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறவிடாமல் அமைந்திருக்கிறது. நயன்தாரா முகத்தில் தெரியும் முதிர்ச்சியால் அவரை ரசிக்க முடிய வில்லை! நயனுக்கு பதில் வேறுஒரு நடிகையை நடிக்க வைத்திருக்கலாம்.ஜெயம் ரவி – நயன்தாரா இவர்களுடன் வில்லன் அர்விந்த்சாமி, அவரது அப்பா தம்பிராமைய்யா, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண், வம்சிகிருஷ்ணா, சஞ்சனா சிங் உள்ளிட்டவர்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.முதல் பாதியில் சில காட்சிகள் நமக்கு அயர்ச்சியை ஏற்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.
சுபா மற்றும் இயக்குநர் ராஜாவின் வசனங்கள் , ஹிப் பாப் தமிழாவின் இசை, ராம்ஜியின் அழகிய ஒளிப்பதிவு, கோபிகிருஷ்ணாவின் படத்தொகுப்பு என பலவும் இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது.தனி ஒருவன், லாஜிக் சில காட்சிகளில் இடித்தாலும் ஆக்சன், காதல், சென்டிமெண்ட் உள்ளிட்ட ஜனரஞ்சக விஷயங்கள் அனைத்திலும் எளிதில் நம்மை கவர்ந்து விடுவதால் தனி ஒருவன் ஜெயித்திருக்கிறான்.Rating 3/5.