அரசியல் கட்சிகளின் பார்வையெல்லாம் தற்போது பாராளுமன்றத் தேர்தல் மீது மட்டுமே இருக்கும். நாட்டு நிகழ்வுகளை தங்களுக்கு எந்தவகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற சிந்தனை மட்டுமே முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும்.
ஆக பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் வன்முறை கோரங்களுக்கு அவரவர் பார்வையில் தீர்வுகளை சொல்வார்கள்.
ஆனால் ஆளுங்கட்சிகளான பா.ஜ.க,,அதிமுக அணியினர் தங்களுக்கு சாதகமாகவே அதை அணுகப் பார்ப்பார்கள்.
தற்போதைய நடவடிக்கையே போதுமானது என்பதாக சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்.
கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த கோரச்சம்பவங்களை கண்டு கொள்ளாமலேயே போனதற்கான காரணம் என்ன என்பதை சொல்ல மாட்டார்கள்..
சீட்டுகளுக்காக போராடி இரு பெரும் திராவிடக் கட்சிகளிடம் பேரம் பேசிய ‘அரசியல் நாகரீகம் ‘ தெரிந்த தேமுதிகவுக்கு கிடைத்திருக்கும் நாலு தொகுதிகளில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகிய இருவரும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போகிறார்களாம்.
பா.ம.க.வில் மருத்துவர் ஐயாவின் மருமகள் சவுமியா அன்புமணி,க்கு ஒரு தொகுதி, மகன் அன்பு மணிக்கு ராஜ்ய சபாவாம்.
இந்த கட்சிகள் எல்லாம் திமுக,,அதிமுக.ஆகிய கட்சிகளின் வாரிசு அரசியலை வன்மையாக சாடிய கட்சிகள் ஆகும்.
இவர்களே இப்படி என்றால் திமுக,அதிமுகவில் எந்த அளவுக்கு வாரிசுகள் களமிறக்கப்படுவார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.
ஆக அரசியல் நாகரீகம் இல்லாமல் போனதுக்கு அத்தனை கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும். குறைந்த பட்சம் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நாகரீகமாவது இருக்க வேண்டும். செய்வார்களா?