கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தையும் புகழையும் தப்பான செயல்களினால் இழந்து விடுவது சினிமா உலகில் சகஜம்தான். ஆனால் எத்தனையோ பேரின் வாழ்க்கையை பார்த்த பின்னரும் சிலர் திருந்துவது இல்லை என்பதுதான் வ்கருத்தம்.
சில நாட்களுக்கு முன்னர் சாலிகிராமம் பகுதியில் நடிகர் செந்திலுக்கு சொந்தமான அபார்ட்மெண்ட்சில் இரண்டு நடிகர்கள் மோதிக் கொண்டார்கள். அவர்கள் வேறு யாருமல்லர் .நடிகர் விமலும் தெலுங்கு நடிகர் அபிஷேக்கும்தான்.!
எல்லாம் டாஸ்மாக் சரக்கு வேலை!
அதிக போதை..இருவருக்கும் இடையில் தடித்த வார்த்தைகள், தாக்குதல்கள்.இத்யாதி..இத்யாதி!
இந்தப் பகுதியில் இது சகஜம் என்றாலும் போலீஸ் கண்டு கொள்வதில்லை. ஆனால் அபிஷேக் புகார் செய்ததால் போலீஸ் விசாரணை செய்ய வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது.
ஆனால் விமல் ஒத்துழைக்க வேண்டுமல்லவா?
காணவில்லை என்கிறார்கள்.