கிருஷ்ணம்.( விமர்சனம்.)2/5.
இயக்குநர்,ஒளிப்பதிவு: தினேஷ் பாபூ.
அக்சய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ்,சாய் குமார்,சாந்தி கிருஷ்ணா.
இசை;ஹரி பிரசாத்.
***********************************************************************
மாணவ.மாணவியர் சேர்ந்து படிக்கும் கல்லூரி.
ராதிகாவை பார்த்து ‘ஐ லவ் யூ’சொல்கிறான் அக்ஷய் .
” நான் காதலிக்க வில்லை” என்கிறாள் அவள்.
“நான் பிராமின்.ஆச்சாரம் உள்ளவங்க”என்பதை அவள் சுட்டிக்காட்டியதும் அவர்களின் காதலுக்கு தடையாக அதுதான் இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு. அதுவும் இல்லை என்றாகியதும் நமக்கு ‘சப்’
தொடக்கத்தில் இருந்தே ஆஸ் யூசுவல் கதையாக இருப்பதால் என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் என்பது தெரியவில்லை.பிற்பாதியில்தான் குருவாயூரப்பன் திருஅருள் ,உண்மை நிகழ்வு என்கிற பிரச்னைகள் வருகின்றன. டச்சிங்காக இருக்கிறது.
சாய் குமார், பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா இருவரும் கோடீஸ்வர தம்பதிகள் என்பதை முற்பாதியிலும் பாசம்,கவலை என்பதை இடைவேளைக்குப் பிறகும் காட்டுகிறார்கள். ஆர்ப்பாட்டமில்லாத அந்த கவலை என்றாலும் மகனுக்கு எதாவது ஆகிவிடுமோ என்கிற தவிப்பு நம்மை கலங்க வைக்கிறது.
நாயகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு மென்மையான தோற்றம். தமிழக ரசிகர்கள் வேறு மாதிரியாக பார்ப்பார்கள்.
பிற்பாதியில் கதாநாயகனுக்கு அப்படி ஒரு வியாதி இருப்பதும் அது குருவாயூரப்பன் திருவருளால் நீங்குகிறது என்பதும் உண்மைச் சம்பவமாம்.
படம் முடிந்து வருகிறவர்கள் குருவாயூருக்கு டிக்கெட் எடுப்பார்கள்.