எல்லோரும் விவேக்கை காமடி நடிகர் அல்லது கருத்து கந்தசாமியாகத்தான் நினைக்கிறார்கள்.
அந்த காலத்தில் காமடியாகச்சொல்லித்தான் கலைவாணர் என்.எஸ்.கே. மக்களை சிந்திக்கவைத்தார். அவரது காலத்துக்குப் பின்னர் காமடி என்பது அடுத்தவர்களை நக்கல் செய்வது அல்லது இரட்டை அர்த்தம் என்கிற அளவுக்கு தாழ்ந்து விட்டது.
இதற்கு முக்கிய காரணம் சபா நாடகங்கள் தான்.!
ஆனால் விவேக் சிந்திக்கவும் வைத்தார். நாட்டு நடப்புகளை சுட்டிக் காட்டினார்.
அண்மையில் இலங்கை சென்றிருந்தார்.
அங்கு விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125- ம் ஆண்டு விழாவில் பேசியவர் சத்தியமான உண்மையையும் சொல்லி வந்திருக்கிறார்.
“ஈழத் தமிழன் இருக்கும்வரை தமிழை அழிக்க முடியாது!”
தற்போது தமிழ்நாட்டில் பிற மாநிலத்தார் குறிப்பாக வட இந்தியர்கள் அதிக அளவில் பணியில் அமர்த்தப்பட்டு தமிழ்நாட்டு குடி மக்களாக பதிவாகி இருக்கிறார்கள். வரும் காலத்தில் “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து சொல்லடா “என்பதற்கு அடையாளம் இல்லாது போய் விடும்.