பொள்ளாச்சி நால்வர் அணியினர் கல்லூரிப் பெண்களை ஆண்டுக்கணக்கில் தங்களின் காம இச்சைக்கு இரையாக்கிக் கொண்டதைப் பார்த்து தமிழ்நாடே கொதித்துப் போய் இருக்கிறது.
ஆளும்கட்சியான அதிமுக துணை சபாநாயகரின் மகனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கடுமையாக குற்றம் சாட்டுகிறார்கள்.இதனால்தான் காவல் துறையினர் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். ஆண்டுக்கணக்காக காமவெறியர்களை காப்பாற்றிய காவல்துறை குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சிறையில் எந்த குறையும் இல்லை என்கிறார்கள்.
தளபதி விஜய்யின் ரசிகர்கள்தான் கொதித்துப் போய் இருக்கிறார்கள்
மதுரையில்தான் எதற்கும் பிள்ளையார் சுழி போடப்படும். தளபதி ரசிகர்கள் போட்டு விட்டார்கள் போஸ்டர்.!
“இனி தமிழகத்தில் பாலியல் குற்றம் புரிபவர்கள் விரைவில் தண்டிக்கப்படவேண்டும்.இல்லை துடிதுடிக்க தலை துண்டிக்கப்படவேண்டும்”என்கிற நெருப்பு வரிகள் அந்த சுவரொட்டியில்!