பாலிவுட் பைங்கிளிகளுக்கு ‘பிகினி ‘என்பது பிடித்தமான ஒன்று..
அவர்களின் உடல்வாகு பிகினிக்கு பொருந்துகிறது.
அதனால் அடிக்கடி கடற்கரைகளில் கடற்கன்னிகளாக காட்சி தருகிறார்கள்.
பாலிவுட் நடிகைகளில் மிகவும் அழகானவர் கரீனா கபூர் .
கோடீஸ்வரர்கள்,பெரிய நடிகர்கள் இந்த பேரழகி மீது பித்தாகிப் போயிருந்தார்கள்.
எப்படியாவது திருமணம் செயுது கொள்ளவேண்டும் என்கிற கனவுகளில் மிதந்தார்கள்.
ஆனால் மனைவியை டைவர்ஸ் பண்ணிய சயீப்அலிகான் மீது கரீனாவின் கண் பாய்ந்தது.அப்போதே பாதிப்பேர் நாடி தளர்ந்து போனார்கள்.
அண்மையில் கரீனா பிகினியில் படம் போட்டதை கண்டித்து பொங்கி விட்டார்கள் டிவிட்டர் விசுவாசிகள்.
“பொண்டாட்டியை இப்படி பிகினியில் படம் போட விடலாமா?”என ஆத்திரத்தை காட்டினார்கள்.
அவர்களுக்கு கரீனாவின் பதில் என்ன?
“நாங்கள் பொறுப்பான கணவன்-மனைவியாக வாழ்கிறோம். அவர் என்னை நம்புகிறார்.அது போதும் .பிகினி போட்டால் தப்பா என்ன? போங்கய்யா” என்கிற ரீதியில் பதில் சொல்லி இருக்கிறார்.