நடிகை தாமிரபரணி பானு – ரிங்கு டோமியின் திருமணம் இன்று கொச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. ‘தாமிரபரணி’ படத்தில் நடிகர் விஷால் ஜோடியாக அறிமுகமான பானு, அதை தொடந்து, தாமிரபரணி பானு என்றே அழைக்கப்பட்டார். இந நிலையில் மலையாள பின்னணி பாடகி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் நடிகை பானுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 23-ந்தேதி கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடிகை பானு-ரிங்கு டோமிக் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதைதொடர்ந்து நடிகை பானு – ரிங்கு டோமிக் திருமணம் இன்று (30-ந்தேதி) கொச்சி எடப்பள்ளியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் மணமக்கள் இருவரும் கேரள பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர், திருமணத்தில் ஏராளமான மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.. இன்று மாலை இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் உள்ள கோகுலம் பார்க் ஹோட்டலில் நடக்கிறது. வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ள பானு, தொடர்ந்து சகுந்தலாவின் காதலன், வாய்மை மற்றும் பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்து வருவது குறிப்பிடதக்கது.