சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரித்திருக்கும் படத்திற்கு “பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர்…
யோகி பாபு பேய் என்பது சிறப்பு செய்தி.
இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார்
கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ்…இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர்…
படம் பற்றி இயக்குனர் சுரேஷ் என்ன சொல்கிறார்?
“நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி பயன்படுத்தி மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்…
அந்த பார்முலா படி யோகி பாபுவ இந்த பட்டிபுலத்தில் பயன் படுத்திக் கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை ..படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார்.. அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப் படுத்தி இருக்கிறார்.
கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கு..அந்த ஊரில் உள்ள சில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது …ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பது தான் கதை…”என்கிறார்.