விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம்,சமந்தா நடித்து வந்த ’10 எண்றதுக்குள்ள’ படத்தின் ராஜஸ்தான் படப்பிடிப்பை முடிந்துவிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த படக்குழு, சில காட்சிகளின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தது.. இந்நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாயகி சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது, ‘கடைசி நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர்களை விட்டு பிரியும்போது உணர்ச்சிகரமாக இருந்தது. இந்த டீமுடன் பணிசெய்தது எனக்கு பல அருமையான அனுபவங்களை கொடுத்தது. இந்த படத்தை நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன்’ என்று கூறியுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவருடனும் விக்ரம் மற்றும் சமந்தா இணைந்து செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டு மகிழ்ச்சியுடன் பிரிந்தனராம்.ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 21 என தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துவிட்டதால் அதற்கு முன்னர் இறுதிகட்ட பணிகள் முடிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.